நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுவனைக் காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி!
பத்தரமுல்லை – தியத்த உயன நாடாளுமன்ற நுழைவு வீதிப் பகுதியில் நேற்றைய தினம் பதற்றநிலைமை ஒன்று ஏற்பட்டது.
பெற்றோலிய வளங்களை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து குறித்த பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அப்பகுதியில் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் பொலிஸாரின் தடுப்பை மீறி முன்னேறிச் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்ட போது வீதியில் நின்ற சிறுவனை நோக்கி அது சென்றுள்ளது.
இந்த நிலையில் மற்ற பக்கத்தில் நின்ற பொலிஸ் அதிகாரி தான் பாதிக்கப்பட கூடும் என்பதனை குறித்து சிந்திக்காமல் சிறுவனை காப்பாற்ற அவ்விடத்திற்கு சென்றுள்ளார்.
அருங்கிருந்த சிறுவனை தூக்கிய நிலையில் பாதுகாப்பான இடம் நோக்கி பொலிஸ் அதிகாரி ஓடிச் செல்லும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
மக்கள் மீது கடும் வெறுப்பை காட்டு பொலிஸாருக்கு மத்தியில் இந்த அதிகாரியின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.