போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திரௌபதி முர்மு இந்தியாவின் 15வது ஜனாதிபதியானார்!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, 50 சதவித வாக்குகளுக்கு மேல் பெற்று இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதி ஆனார்.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதிவிக்கலாம் 24ஆம் திகதியுடன் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான திரௌபதி முர்மு மற்றும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த யஷ்வந்த் சின்கா ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்த தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் முதல் சுற்றில் இருந்தே முன்னணியில் இருந்த திரௌபதி முர்மு, இறுதிச்சுற்றின் முடிவில் 70 சதவித வாக்குகளை பெற்றார்.
இதன்மூலம் அவர் இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.