போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நடிகை ரோஷினிக்கு கிடைத்த She விருது!
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் பிரபலம். இதில் முதன்முதலாக நாயகியாக நடித்த கண்ணம்மா என்கிற ரோஷினிக்கு இந்த தொடர் மூலம் அதிக ரசிகர்கள் கிடைத்தார்கள்.
அதில் கிடைத்த பிரபலம் ரோஷினி அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் அவரோ சில மாதங்களுக்கு முன்பு தொடரில் இருந்து விலகுவதாக கூறி பின் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இப்போது இந்த நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளராக வருவார் என்று பார்த்தால் தேர்வாகவில்லை, ரசிகர்களுக்கு அது கொஞ்சம் வருத்தம் தான்.
இந்த நிலையில் நடிகை ரோஷினிக்கு She விருது கிடைத்துள்ளது. அந்த விருதுடன் ரோஷினி எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்ய அதைப்பார்த்த ரசிகர்கள் நடிகைக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.