48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
பிரசவ வலியால் துடித்த கர்பிணிப் பெண்: பொலிஸ் அதிகாரியின் இரக்க குணத்தை பாராட்டும் பொதுமக்கள்!
யாழில் பிரசவ வழியால் மருததுவமனை சென்றபோது பயன்படுத்திய முச்சக்கர வண்டி பொலிஸ் நிலையம் முன் நின்றதால் பொலிஸ் உத்தியோகத்தர் தனது வாகனத்தை கொடுத்து உதவிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பிரசவ வலியால் துடித்த பெண் முச்சக்கர வண்டியின் மூலம் சென்றுள்ளார்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் அருகே சென்ற போது முச்சக்கர வண்டி நின்றுள்ளது.
இதனையடுத்து அதை அவதாணித்த பொலிஸ் உத்தியோகத்தர் மயூரன் முச்சக்கர வண்டி சாரதிக்கு பெட்ரோல் கொடுத்துள்ளார் பெட்ரோல் நிரப்பப்பட்டுபம் முச்சக்கர வண்டி இயங்காததால் பொலிஸா் உத்தியோகத்தர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலக பொலிஸாருக்கு சொந்தமான வாகனத்தினை கொடுத்து உதவினார்.
இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பொலிஸ் உத்தியோகத்தரை பாராட்டி வருகின்றனர்.