போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்!
இரத்தினபுரியில் கர்ப்பிணி பெண்ணுக்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணித் தாய் ஒருவரை இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது, எரிபொருளின்றி வீதியில் முச்சக்கரவண்டி நின்றுள்ளது.
இதனை அவதானித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்த எரிபொருளை வெளியே எடுத்து அதனை முச்சக்கர வண்டிக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனார்.
கலவான பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் வசந்த குமார என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு எரிபொருளை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
பொலிஸாரின் உத்தியோகபூர்வ சீருடையை பயன்படுத்திய பல்வேறு மோசமான செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு மத்தியில் இந்த பொலிஸ் அதிகாரியின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.