மகா வித்தியாலய மாணவிகள் தங்க விருது
மட்/ஆரையம்பதி இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவிகள் தங்க விருது பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச எடின்பரோ கோமகன் விருதுகளில் 2017, 2018 ஆம் ஆண்டுகளில் வெண்கலம், வெள்ளி விருதுகளைப் பெற்ற மாணவிகள்,
இன்றைய தினம் (26-01-2022) புதன்கிழமை இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற The Duke of Edinburgh’s International Award ceremony 2019/2020/2021 இற்கான விருது வழங்கல் நிகழ்வில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் டி. திலோசனா (T. Dilosana), ஆர்.சஜீத்த (R.Sajeiththa), எஸ்.சதுர்த்திகா (S.Sathurthika), எஸ்.மிருஷிகா (S.Mirushika) ஆகிய மாணவிகள் தங்க விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.