மருத்துவ துறையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த மட்டக்களப்பு மாணவன்!
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்றையதினம் (28-08-2022) வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மருத்துவபீடம், தமிழ் மொழி மூலத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகிறது.
மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஸ் மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வைத்தியர் தமிழ்வண்ணன் மற்றும் வைத்தியர் பகீரதி அவர்களின் மகனான துவாரகேஸ் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.