168 வருட வரலாற்றில் இலங்கை இரட்டை சகோதரிகள் படைத்த சாதனை!
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் 168 வருட வரலாற்றில் முதன்முறையாக இலங்கையை சேர்ந்த இரண்டு இரட்டைச் சகோதரிகள் ஒரே நேரத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளனர்.
நதீஷா குணரத்ன மற்றும் தேஜானி குணரத்ன ஆகியோரே பட்டம் பெற்றுள்ளனர்.
குறித்த இரண்டு இலங்கை இரட்டை சகோதரிகளும் உலக இரட்டையர் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக கடந்த 17ஆம் திகதி கலாநிதிப் பட்டங்களைப் பெற்றனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் பயின்ற பின்னர் 2016 ஆம் ஆண்டு மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை ஆரம்பித்த நிலையில் தற்போது குறித்த சகோதரிகள் அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.