போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சரஸ்வதி தேவராசா
தோற்றம்19 MAY 1944 மறைவு27 MAY 2017
கொக்குவில் மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்)
திதி: 01-06-2022
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி தேவராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து ஆனதம்மா
உமைப்பிரிந்து ஆனாலும்
ஆறவில்லை எம் துயரம்!
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!
பண்போடும் அன்போடும்
பழகி உறவினர்
பாசமதை பெற்றீர்கள்!
நிலையற்ற வாழ்வில்
நிலையான உமதன்பை
தேடியே உருகுகின்றோம்!
என்றென்றும் எழிலோடு
எம் நெஞ்சிலெ நீங்கள் வாழ்வீர்கள் !
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!