போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
சித்ரா பௌர்ணமி பூஜை
சித்ரா பௌர்ணமி நாளானது சித்ரகுப்தனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நன்னாளில் விரதம் இருப்பதன் மூலம் நாம் பல அறிய பலன்களை பெற இயலும்.சித்ரா பௌர்ணமி நாளில் காலையிலே குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக சித்ரகுப்தன் படத்தினை வீட்டில் பலர் வைப்பது கிடையாது. ஆகையால் அரிசிமாவால் சித்ர குப்தனின் படத்தினை வரைய வேண்டும். அவரது கையில் எழுதுகோல் மற்றும் ஏடு இருக்கும்படி வரைவது அவசியம். பிறகு வீட்டில் தீபம் ஏற்றிவைக்கவும்.
மாலையில் தான் சித்ரா பௌர்ணமி பூஜை செய்வது வழக்கம். ஆகையால் மாலை வரை விரதம் இருப்பது நல்லது. விரதம் இருக்க இயலாதவர்கள் பால் பழம் உண்ணலாம். உணவு உன்ன நினைத்தால் உப்பில்லாத உணவை உண்ணலாம். நாள் முழுவதும் சித்ர குப்தனின் நாமத்தை ஜபிப்பது நல்லது.
மாலை நேரத்தில் சித்தகுப்தனுக்குரிய பூஜையினை துவங்கலாம். தலைவாழை இலையில் எருமை பாலால் செய்த பாயாசம், சக்கரை பொங்கல் போன்றவற்றை நைவேத்தியம் செய்து சித்ரகுப்தனை வழிபடவேண்டும். சித்ர குப்தனுக்கான படையலில் பலவிதமான காய் கறிகளால் செய்யப்பட்ட கூட்டினை நிவேதியம் செய்வது சிறப்பு. சுவாமிக்கு தீபாராதனை காட்டி பௌர்ணமி பூஜையை முடிக்கலாம். சித்ரா பௌர்ணமி விரதத்தினை முழுமையாக இருப்போர்கள் இரவு சித்திரை நிலவை பார்த்த பிறகு உணவு உண்ணலாம்.