நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த 3 ராசிகளுக்கு இவ்வளவு நன்மைகளா?
ஜோதிடத்தில் இருக்கும் 12 ராசிகளில், 3 ராசிகளுக்கு மட்டும் சூரிய பகவான் (Sun God) ஆசி எப்போதும் இருக்கும். அனைத்து ராசிகளையும் சூரிய பகவான் ஆசீர்வதித்தாலும் இந்த 3 ராசிகளுக்கு மட்டும் விசேஷ பலன்கள் கிடைக்கும்.
ஏனென்றால் சூரியன் கிரகம் தான் கிரகங்களின் ராஜா. ஒருவரது ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருக்கும் போது அவருக்கு சூரியனின் பாக்கியம் கிடைக்கும். அதனால், அந்த நபர் மரியாதை, பணம், மகிழ்ச்சி, அமைதி பெறுவதுடன் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார்.
சூரிய பகவான் எந்த சூழலிலும், தன்னுடைய ஆசி பெற்ற ஒரு ராசியை கேடயமாக இருந்து பாதுகாப்பார். அப்படி அவருடைய பாதுகாப்பில் இப்போதும் இருக்கக்கூடிய மூன்று ராசிகள் எவை என நாம் இங்கு பார்ப்போம்.
ஜோதிடத்தில் முதல் ராசியாக மேஷம் உள்ளது. இந்த ராசியின் அதிபதி செவ்வாய். சூரியனைப் பின்பற்றுபவராகக் இருப்பார். இந்த காரணத்திற்காக, மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் அருள் எப்போதும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பீர்கள். சூரிய பகவான் உங்களின் கடின உழைப்பை மேலும் ஊக்குவிக்கிறார், இதன் காரணமாக நீங்கள் எந்த விஷயத்திலும் வெற்றி பெறுகிறீர்கள். மேஷ ராசிக்காரராகிய நீங்கள் எந்த துறைக்கு சென்றாலும் வெற்றி உறுதி. குறிப்பாக விளையாட்டு, சுற்றுலா உங்களுக்கு ஏற்றது.
சிம்ம ராசி என்பது சூரிய பகவானின் சொந்த ராசி என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே சூரிய பகவானுக்கு மிகவும் பிரியமானவர்கள். நீங்கள் தலைமைத்துவ திறன்கள், நம்பிக்கை மற்றும் தைரியம் கொண்டவர்கள். சூரிய கடவுள் உங்களின் கடின உழைப்பை மரியாதை மற்றும் வெற்றியாக மாற்றி கொடுப்பார். சிம்ம ராசிக்காரர்களாகிய நீங்கள், உங்கள் தலைமையின் மூலம் சமூகத்தில் அங்கீகாரம் பெற்று விரைவில் பிரபலமாகி விடக்கூடிய அம்சம் இருக்கிறது. உங்களுக்கு பணப் பிரச்சனை இருக்காது.
ராசிக்காரர்களும் சூரிய பகவானுக்குப் பிரியமானவர்கள். தனுசு ராசியின் அதிபதி வியாழன், இவர் சூரியக் கடவுளின் குருவாகக் கருதப்படுகிறார். சூரிய பகவான் உங்களுக்கு அறிவு, ஞானம் மற்றும் நடைமுறை நுண்ணறிவைத் தருகிறார். இதன் காரணமாக நீங்கள் எழுத்து, கல்வி, நீதி மற்றும் வணிகத்தில் வெற்றி பெறுவீர்கள். வேலையின் மீதுள்ள ஆர்வம் உங்களுக்கு புகழையும் செல்வத்தையும் பெற்றுத்தரும்