போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
சோம வாரம்
சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமையும் இணைந்த நாள் அமாசோமவாரம். இந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து 108 முறை வலம் வரவேண்டும்.
அமா என்றால் அமாவாசை. சோமம் என்றால் சோம வாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமையை குறிக்கும். திங்கட்கிழமை அமாவாசை வருவது அமா சோமம் என்று அழைக்கப்படுகிறது.
அமாசோமம் வழிபாடு செய்வதால் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் திங்கட்கிழமையன்று அமாவாசை வருவது சிறப்பு. இந்த நாளில் மறக்காமல், அருகில் உள்ள அரசமரத்தை வலம் வந்து வேண்டுங்கள். வேண்டிய வரம் கிடைக்கும்.
அரச மரம், ஆன்மிகத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அரசமரம் பிரம்மா, சிவன், விஷ்ணு, ருத்ரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபமாக சிறப்பித்து சொல்வார்கள். மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு. அரச மரத்திற்கு சக்தி அதிகம்.
முப் பெரும் தெய்வங்களும் அரச மரத்தில் ஐக்கியமாகியுள்ளது என்பதை கருத்தில் கொண்டே முப்பெரும் தெய்வங்களும் இணைந்த வடிவமான விநாயகரை அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
அரச மரம் கரியமில வாயுவை இழுத்துக் கொண்டு பிராண வாயுவை அளிக்கும். அரச மரத்தடியில் அமர்ந்தாலோ வலம் வந்தாலோ உடல் வளம் பெறும். ஆரோக்கிய மான வாழ்வு கிட்டும்.