பஞ்சாங்கம்
நம்முடைய கலாசாரம், பண்பாடு, சாஸ்திரம், சம்பிரதாயம், விரதங்கள், விசேஷங்கள், வழிபாடுகள், உற்சவங்கள் என பல விஷயங்களை உள்ளடக்கிய ஓர் வழிகாட்டி புத்தகமே பஞ்சாங்கம்.
பஞ்சாங்கம்=பஞ்ச+அங்கம் ,பஞ்ச என்றால் ஐந்து அங்கம் என்றல் அடக்கம் .
பஞ்சாங்கம் ஐந்து முக்கிய உறுப்புகளை கொண்டது அவை :
- வாரம்
- திதி
- நட்சத்திரம்
- யோகம்
- கரணம் .
(1) வாரம்: ஞாயிறு முதல் சனி வரை உள்ள கிழமைகளை அறிவது.
(2) திதி: சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பது. வளர்பிறை 15 திதி, தேய்பிறை 15 திதி மொத்தம் 30 திதிகள்.
(3) நட்சத்திரம்: குறிப்பிட்ட தினம் எந்த நட்சத்திரத்தின் ஆளுமையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்வது. அசுவினி முதல் ரேவதி வரை மொத்தம் 27.
(4) யோகம்: குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்கின்ற மொத்த தூரம். விஷ்கம்பம் தொடங்கி வைதிருதி வரை மொத்தம் 27 யோகங்கள்.
(5) கரணம்: திதியில் பாதி தூரம் கரணம் எனப்படும். பவம் தொடங்கி கிம்ஸ்தக்னம் வரை மொத்தம் 11 கரணங்கள்