மணி பிளான்டை பரிசாக கொடுக்ககூடாதது ஏன்? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க
மிகவும் பிரபலமான உட்புற தாவரங்களில் ஒன்று மணி பிளான்ட். இதன் இதய வடிவிலான இலைகள் அலங்காரத்திற்கு செழுமை சேர்க்கின்ற அதே வேலை இதை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்ற ஒரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
மேலும் இந்த மணி பிளான்ட் வைப்பதால் இயற்கையான காற்று சுத்திகரிப்பு இடம்பெறுவதாகவும் அறியப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, பணச்செடியின் கொடி தரையில் பட ஆரம்பித்தால் அது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த செடி வளர ஆரம்பித்தால், அதன் கொடியை ஒரு நூல் அல்லது குச்சியின் உதவியுடன் மேல்நோக்கி ஏறவிட வேண்டும்.
ஏனெனில் கொடியானது தரையைத் தொடத் தொடங்கினால் அது வாழ்க்கையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கும் என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மணி பிளாண்ட் வெள்ளி கிரகத்துடன் தொடர்புடையது என்று வாஸ்து சாஸ்திரத்தில் நம்பப்படுகின்றது.
எனவே வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் மணி பிளான்டை நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் வெள்ளிக்கிழமை இந்த செடியை வெட்ட கூடாது. இது நிதி நிலைமையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, எவ்வளவு நெருக்கமா இருந்தாலும், ஒருவர் வீட்டில் நடப்பட்ட மணி பிளான்டை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டின் புண்ணியம் போய்விடும். மேலும், யாருக்கும் மணி பிளான்டை பரிசளிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது அசுபமாக கருதப்படுகிறது.
மணி பிளான்டை பரிசளிப்பதால் பரிசளிப்பவருக்கு தான் பாதகம் ஏற்படுகின்றது. உங்கள் வீட்டில் உள்ள செல்வத்தை மொத்தமாக இன்னொருவருக்கு கொடுப்பதாகவே மணி பிளான்டை பரிசளிப்பது கருதப்படுகின்றது.