ருத்ராட்சம்
ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் தோன்றின. வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும், இடது கண்ணில் இருந்து பதினாறு வெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றின. நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள் வெளிப்பட்டன.
ருத்ராட்சம் என்பது ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் (Elaeocarpus ganitrus) என்ற மரத்தின் விதை.
அணியும் முறை :
ருத்திராட்சத்தை மனிதர்கள் அனைவரும் அணியலாம். ஆனால் இதனை அணிந்தவர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தீட்டு இடங்களுக்கோ, இல்லத்திற்கோ செல்லக்கூடாது. தீட்டு ஆனவர் கைகளால் உணவு அருந்தக் கூடாது. அப்படி ஏதேனும் அறியாமல் நடந்து விட்டால் ருத்ராட்சத்தை தூய்மை செய்து பின்பு அணிந்தால் நன்மை தரும். மேலும், பெண்கள் ருத்திராட்சம் அணிந்திருந்தால் இரவில் கழற்றி பூஜை அறையில் வைத்து விட்டு காலை எழுந்து குளித்து விட்டு அணிய வேண்டும், மாதவிடாய் காலங்களில் இதனை கண்டிப்பாக தொடுதல் கூடாது.