லக்ஷ்மி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
சுக்கிர பகவான் தன்னுடைய சொந்த ராசியான துலாம் ராசியில் ஆட்சி, அதிபதியாக சஞ்சரிக்க உள்ளதோடு அங்கு புதன் பகவானும் சேர்ந்து லக்ஷ்மி நாராயண ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
செப்டம்பர் 18ம் திகதி முதல் அக்டோபர் 13ம் திகதி வரை இதனால் சில ராசியை சேர்ந்தவர்களுக்கு தன லாபம் பெருகும். எந்த ராசிக்கெல்லாம் திருமண சுகம் பெருகும், வேலை, சொந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் என நாம் இங்கு பார்ப்போம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு ராசி அதிபதியான புதனுடன் சேர்ந்து சுக்கிரன் ஆட்சி பெற்று அமர உள்ளார். இதன் காரணமாக உங்கள் வாழ்வில் செல்வம் அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். வணிகத்தில் முன்னேற்றமும், புதிய வருமான, வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் வீட்டிலும், பணியிடத்திலும் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும்.
துலாம் ராசி அதிபதியான சுக்கிரன் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்வதோடு, புதனுடன் சேர்வதால் உருவாகக்கூடிய லக்ஷ்மி நாராயண ராஜயோகத்தின் சுப பலன்களால் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடையலாம். குடும்ப உறவு மேம்படும். சகோதர சகோதரிகளிடையே இணக்கமான சூழல் இருக்கும். ஆன்மிகத்தின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளைப் பெறுவீர்கள். நண்பர்களைச் சந்தித்து மகிழ்வதோடு, அவர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பல நாள் விருப்பம் நிறைவேறும். கல்வி, விளையாட்டில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம்.
தனுசு ராசியினருக்கு லக்ஷ்மி நாராயண ராஜயோகத்தால் எதிர்பாராத முன்னேற்றத்தைப் பெற்றிடலாம். பணம் சம்பாதிக்க பல நல்ல வாய்ப்புகளைப் பெற்றிட முடியும். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உங்களின் வேலை, தொழிலில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் வெற்றி அடைவீர்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பணம் தொடர்பான பிரச்சினைகளிருந்து விடுபடும் வாய்ப்பு உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மகர ராசியை சேர்ந்தவர்கள் உங்கள் வாழ்க்கையில் வேலையிலும், பணம் சேர்ப்பதற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல செய்தி தேடி வரும். குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய வாண்டி, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. ஆன்மிகம், சுப காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா, ஆன்மிக யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நிதி நிலை மேம்படும். புதிய சொத்து வாங்க முயல்வீர்கள். சமூக பணிகளில் மரியாதை அதிகரிக்கும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். தேர்வில் வெற்றி பெற முடியும். பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகள் உருவாகும். இந்த காலத்தில் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல், இனிமையான பேச்சை கடைப்பிடிக்கவும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவும், பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நீங்கள் முன்னர் செய்த முதலீடுகள் மூலம் நல்ல பலன் பெறுவீர்கள்.