நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இரவில் பாதங்களில் எண்ணெய் மசாஜ் செய்தால் உடலில் நடக்கும் மாற்றம் என்ன?
தேங்காய் எண்ணெய்யில் பல சிறந்த நன்மைகள் இருக்கின்றன.இதிலிருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் போன்றவை தோல் தொற்றுக்கள், அரிப்பு மற்றும் வலியை அகற்ற உதவுகிறது.
இந்த பண்புகள் இந்த பண்புகள் சருமத்தில் உள்ள இறந்த மற்றும் அழுக்கு செல்களை நீக்கி பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.குதிகால் வெடிப்பு, வறண்ட சருமம் உள்ளிட்ட பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குவதற்கு தேங்காய் எண்ணெய் உதவுகிறது.
எனவே பாதங்களில் ஏற்படும் பிரச்சனைக்கு தேங்காய் எண்ணெய் மசாஸ் செய்வதால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நமது உடலின் முழு எடையையும் தாங்குவது இ்த பாதம் தான்.ஆனால் பெரும்பாலும் இந்த கால்களின் சுத்தத்தை யாரும் கண்டுகொள்வதில்லை.இதனால் பாதங்களில் தூசி மற்றும் அழுக்குகளை அதிகமாகி சேகரித்து குதிகால் வெடிப்பு மற்றும் மந்தமான பாதங்களுக்கு வழிவகுக்கும்.
குளிர்காலத்தில் நமதுபாதங்ள் விரிசல் அடைகின்றன.இதனால் கால்களுக்கு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. தேங்காய் எண்ணெயில் அதிகமான வைட்டமின் ஈ மற்றும் இயற்கை புரதம் நிறைந்துள்ளதால் சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகின்றது.
தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதனை தக்கவைத்துக்கொள்ள இந்ததேங்காய் எண்ணெய் உதவுகிறது.இது தோல் பராமரிப்பை மேம்படுத்துகிறது.நாம் தினமும் வெளியில் பூஞ்சை பக்டீரியா பாதிப்பதால் தேங்காய் எண்ணெய் மசாஸ் இற்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
இது ஆய்வின் படி நிரூபிக்கப்பட்டதாகும்.இது அரிக்கும் தோலழற்சி, ஆணி பூஞ்சை, ரிங்வோர்ம் மற்றும் பாதங்களில் சிவத்தல் ஆகியவற்றைத் தடுக்கும் ஒரு கவசமாக செயல்படுகிறது.
பாதங்களில் பக்டீரியாவா் ஏற்படும் துர்நாற்றத்தை இது போக்குகிறது.படுக்கை நேரத்தில் கால் மசாஜ் செய்வது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஒரு எளிய 5 நிமிட கால் மசாஜ் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெயைக் கொண்டு பாத மசாஜ் செய்வது, கால்களின் அடிப்பகுதியில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகளை செயல்படுத்துகிறது. இது உடல் பதற்றம், மன அழுத்தம் மற்றும் தேவையற்ற பதட்டம் ஆகியவற்றைக் குறைக்கிறது.
காலணியுடன் நடக்கும் போது, பாதங்களில் கொப்புளங்கள் தோன்றி சருமம் வறண்டு போகலாம். இதிலிருந்து நிவாரணம் பெற தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.