போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
உடல் பருமனைக் குறைக்க ஆப்பிள் சீடர் வினிகர்
பெரும்பாலானோர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உடல் பருமனைக் குறைக்க ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பொருள் இன்று மக்களிடையே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆப்பிள் சீடர் வினிகர் சமையலில் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக ஆப்பிள் சீடர் வினிகர் மருத்துவ குணம் வாய்ந்தது. இதனால் இது டைப்-2 சர்க்கரை நோய், எக்ஸிமா மற்றும் உயர் கொலஸ்ட்ரால் போன்ற அனைத்து வகையான நோய்களை சரிசெய்வதற்கு உதவுகிறது.
பெரும்பாலான மக்கள் ஆப்பிள் சீடர் வினிகரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பார்கள். ஆனால் இது அமிலத்தன்மை வாய்ந்தது என்பதால் வெறும் வயிற்றில் குடிப்பது அவ்வளவு நல்லதல்ல. அப்படியானால் எப்போது ஆப்பிள் சீடர் வினிகரைக் குடிக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம். ஆப்பிள் சீடர் வினிகரை வெறும வயிற்றில் குடிப்பதை விட, இரவு நேரத்தில் குடித்தால் அது பல நன்மைகளை வழங்கும். இப்போது ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதையும், அதை எப்படி குடிக்கலாம் என்பதையும் காண்போம்.
ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன. ஆகவே இது உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. பழங்காலத்தில் ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு கிருமிநாசினியாகவும், சுத்தம் செய்யும் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர, ஆப்பிள் சீடர் வினிகர் உணவுகளை நீண்ட காலம் பாழாகாமல் பாதுகாக்க உதவுகிறது.
நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால், ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவி புரியும். பல ஆய்வுகளும் உடல் கொழுப்பைக் குறைக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவுவதாக தெரிவிக்கின்றன. வினிகரில் உள்ள அசிடிக் அமிலம் உடலில் கொழுப்பு தேங்குவதை குறைக்கும், பசியை அடக்கும், செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் கொழுப்பு எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கும். ஆனால் எக்காரணம் கொண்டும் ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால் அது குமட்டலுக்கு வழிவகுப்பதுடன், பற்களின் எனாமலை அரித்துவிடும்.
சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் ஆப்பிள் சீடர் வினிகரை தொடர்ந்து உட்கொள்வது மிகவும் நல்லது. இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும். ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வது இன்சுனில் உணர்திறனை அதிகரிப்பதில் நன்மை பயக்கும். குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகரை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் குடிப்பது அதிக நன்மை பயக்கும்.
வாய் துர்நாற்றம் பலருக்கும் பல இடங்களில் பிறருடன் தொடர்பு கொள்ளும் போது சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதைத் தவிர்ப்பது கடினம். என்ன தான் இரவு தூங்கும் முன் பற்களைத் துலக்கினாலும், காலையில் எழும் போது வாய் துர்நாற்றமடிக்கும். இந்த பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வை ஆப்பிள் சீடர் வினிகர் வழங்கும். ஏனெனில் ஆப்பிள் சீடர் வினிகர் பாக்டீரியாக்களை கொன்றுவிடும் மற்றும் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நீங்கள் பல நாட்களாக செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்றவற்றால் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால் இரவு தூங்கும் முன் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடித்தால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
அனைத்து வயதினருக்கு நல்ல தூக்கம் அவசியமான ஒன்று. ஆனால் அந்த தூக்கத்தை பெரும்பாலான மக்கள் பெறுவதில்லை. தூக்கமின்மை பிரச்சனையானது உடல் பருமன் மற்றும் எரிச்சல் போன்வற்றிற்கு வழிவகுக்கும். ஆனால் இரவு தூங்கும் முன் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடித்தால், இரவு நேரத்தில் 7-8 மணிநேரம் நல்ல ஆழமான தூக்கத்தைப் பெறலாம்.
ஆப்பிள் சீடர் வினிகரை பல வழிகளில் உட்கொள்ளலாம். அதுவும் எலுமிச்சை அல்லது தேன் என்று எதனுடன் வேண்டுமானாலும் கலந்து குடிக்கலாம். ஆனால் இரவு நேரத்தில் குடிக்கும் போது, ஈஸியான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதுவும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து, வேண்டுமானால் சுவையைக் கூட்ட சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடியுங்கள். வேண்டுமானால், இரவு நேரத்தில் சாதாரண தண்ணீருக்கு பதிலாக இந்த ஆப்பிள் சீடர் வினிகரை சில நாட்கள் குடித்து பாருங்கள். இதனால் சில நாட்களில் அதன் பலனை நன்கு காணலாம்.