கரப்பான் பூச்சிகளுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இந்த பொருட்கள் போதும்

பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் இருக்கும் அழிக்க முடியாத தொல்லைகளில் ஒன்று தான் கரப்பான் பூச்சி. அதனை அழிக்க சந்தைகளில் ஏராளமான இரசாயனம் கலந்த மருந்து பொருட்கள் கிடைக்கின்றன.
ஆனால் அவற்றை வீடுகளில் பயன்படுத்துவது குழந்கைள் மற்றும் வயதானவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதிலும் குழந்தைகள் வீட்டில் இருந்தால், இத்தகைய மருந்துக்களை பயன்படுத்துவது ஆபத்தானது.
வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகரித்தால் அதிகம் செலவு செய்து மருந்துகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.கரப்பான் பூச்சியை எவ்வாறு இயற்கை முறையில் விரட்டியடிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கரப்பான் பூச்சிகளைப் போக்க பேக்கிங் சோடா சிறந்தது.ஒரு கிளாஸ் தண்ணீரில் பேக்கிங் சோடாவை நன்கு கலந்து, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து இந்த கலவையை கரப்பான் பூச்சிகள் அதிகமாக நடமாடும் இடங்களில் தெளித்தால் இந்த வாசனை கரப்பான் பூச்சியை விரட்டிவிடும். இந்த வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு எரிச்சல் ஊட்டக்கூடியதாம்.
கரப்பான் பூச்சிகளை விரட்ட பலா இலை பொடியையும் பயன்படுத்துவது சிறந்த தீர்வை கொடுக்கும் இதற்கு இலையை நன்றாக அரைத்து அந்த பொடியை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தூவினால் கரப்பான் பூச்சிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
கரப்பான் பூச்சிகளை விரட்ட பெப்பர்மின்ட் ஆயில் சிறந்த பலனை கெடுக்கும் இதற்கு, ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை கிளாஸ் பெப்பர்மின்ட் எண்ணெயை கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வீட்டில் பயன்படுத்தினால் இந்த வாசனைக்கு கரைப்பான் பூச்சிகள் வீடடு பக்கமே வராதாம்.
மண்ணெண்ணெயை பயன்படுத்தி அனைத்து கரப்பான் பூச்சிகளையும் வெறும் 30 நிமிடத்தில் விரட்டியடிக்க முழயும்.இதற்கு ஸ்ப்ரே பாட்டிலில் மண்ணெண்ணெய்யை நிரப்பி கரப்பான் பூச்சிகள் அதிகம் காணப்படும். இடங்களில் தெளித்தால் போதும் கரப்பான் பூச்சி தொல்லைக்கு முடிவுக்கட்டிவிடலாம்.