கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் 3 மாதத்தில் தரையில் படுக்கலாமா? அறிவியல் உண்மை
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குறிப்பிட்ட சில விடயங்களை செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
அதிலும் குறிப்பாக முதல் குழந்தையை பெற காத்திருக்கும் பெற்றோர்கள் கருவில் குழந்தை இருக்கும் பொழுது கவனத்துடன் இருப்பது அவசியம்.
கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் பெண்களுக்கு தினசரி வேலைகளை செய்யலாமா? மாடி படிகளில் ஏறி இறக்கலாமா? உடற்பயிற்சி செய்யலாமா? என பல சந்தேகங்கள் நம்மிள் பலருக்கு இருக்கும். இது பெரும்பாலான பெண்களுக்கு முதல் கர்ப்பத்தில் ஏற்படும் பொதுவான சந்தேகங்களாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் 3 மாதங்களில் கர்ப்பமாக இருக்கும் பொழுது குறிப்பிட்ட சில விடயங்களை மறந்தும் செய்யக் கூடாது. இது குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1.கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தாராளமாக மாடி படிகளில் ஏறி இறங்கலாம். ஆனால் முடிந்தவரை மிகவும் கவனமாக மெதுவாகவும் ஏறி இறங்க வேண்டும். இது தாயின் உடல்நலத்திற்கும் குழந்தையின் அசைவிற்கு சிறந்தது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
2. சிலர் வீட்டிலுள்ள வேலைகளை கூட செய்யாமல் இருப்பார்கள். கர்ப்பமாக இருப்பவர்கள் தினசரி வேலைகளை செய்யலாம். என்ன செய்தாலும் கவனத்துடன் நிதானமாக தடுமாற்றம் இல்லாமல் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
3. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உடற்பயிற்சிகளை தினமும் செய்வது அவசியம். இது அவர்களின் பிரசவத்திற்கு உதவியாக இருக்கும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஏற்றார்ப்போல் ஒவ்வொருவரின் உடல்நிலை பொறுத்து உடற்பயிற்சி மாறுப்படும்.
முதல் மூன்று மாத காலத்தில் வாக்கிங், ஸ்ட்ரெட்சஸ் போன்ற பயிற்சிகளை செய்யலாம். அடுத்த மூன்று மாதங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளின் படி உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
4. கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் இரத்தப்போக்கு உள்ளவர்கள், முதல் குழந்தை குறை பிரசவத்தில் பெற்றவர்கள், நஞ்சுக்கொடி கர்ப்பப்பை வாய் அருகே இருப்பவர்கள் ஆகியவர்கள் உடற்பயிற்சி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிரசவ காலம் வரும் வரை மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது.
5. கர்ப்பகாலத்தில் சில ஊசிகளை போட வேண்டி ஏற்படும். அதில் முக்கியமாக TT(Tetanus Toxoid) ஊசியை ஒன்றரை மாத இடைவெளியில் இரண்டு முறை போட வேண்டும். அத்துடன் மூச்சுத்திணறல் மற்றும் நிமோனியாவைத் தடுக்க 7 வது மாதத்திற்கு பிறகு இன்புளூயன்சா ஊசி போட வேண்டும். இவை கர்ப்ப காலத்தில் கட்டாயமாக பார்க்கப்படுகின்றது.