போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கல்சியத்தை பெற இந்த உணவுகளை சாப்பிடுங்க.
நாம் உண்ணும் உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. உணவுகளின் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களைப் பெறலாம். நமது ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக இந்த கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஓர் சத்து. இந்த கால்சியம் பாலில் அதிகம் உள்ளது. ஆனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால், அவர்களால் பால் மற்றும் அது சம்பந்தமான பொருட்களை உட்கொள்ள முடியாது. சிலருக்கு பால் குடிக்க பிடிக்காது. இத்தகையவர்கள் போதுமான கால்சிம் சத்தைப் பெறுவது சவாலாக இருக்கும்.
பலர் கால்சியம் சத்தை பெறுவதற்கு கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வார்கள். எவ்வளவு தான் மாத்திரைகளை எடுத்தாலும், உணவின் மூலம் பெறுவதைப் போன்று வராது. கால்சியம் பாலில் மட்டுமின்றி, வேறு பல உணவுகளிலும் உள்ளது. அந்த உணவுப் பொருட்களை அறிந்து அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், கால்சியம் குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இங்கு பாலைத் தவிர கால்சியம் சத்தை பெற உதவும் பிற உணவுகளைக் காண்போம்.
பீன்ஸில் கால்சியம் அதிகம் உள்ளது. இது தவிர பீன்ஸில் புரோட்டீன் சத்தும் ஏராளமான அளவில் உள்ளது. இந்த பீன்ஸை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய கால்சியம் சத்தை பெறலாம். கூடவே, பிற சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.
மத்தி, சால்மன் போன்ற மீன்களில் கால்சியம் சிறப்பான அளவில் நிறைந்துள்ளது. நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், குறிப்பாக மீனை விரும்பி சாப்பிடுபவரானால், இந்த மீனை வாரத்திற்கு 2 முறை வாங்கி சாப்பிடுங்கள்.
நட்ஸ்களில் பாதாம் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. இந்த பாதாமை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய கால்சியம் சத்து கிடைக்கும். அதற்கு பாதாமை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாதாம் பாலாக தயாரித்தும் சாப்பிடலாம். அதுவும் தினமும் ஒரு டம்ளர் பாதாம் பால் குடிப்பது மிகவும் நல்லது.
ஓட்ஸ் உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இந்த ஓட்ஸை நீரில் சமைத்து காலை வேளையில் உட்கொண்டால், அதன் மூலம் உடலுக்கு கால்சியம் சத்தும் கிடைக்கும் என்பது தெரியுமா? இதன் மூலம் அதிகளவில் கால்சியம் கிடைக்காவிட்டாலும், ஒரு நாளைக்கு வேண்டிய கால்சியம் சத்தைப் பெறலாம்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழத்தின் மூலம் கால்சியம் சத்தை பெற விரும்பினால், அதை ஜூஸ் வடிவில் உட்கொள்ளாமல், அப்படியே சாப்பிடுங்கள்.
சோயா பால்
லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு சோயா பால் ஒரு சிறந்த தேர்வு. சொல்லப்போனால் வழக்கமான ஒரு டம்ளர் வழக்கமான பாலை விட சோயா பாலில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. ஆகவே சோயா பாலை தினமும் உங்கள் உணவில் தவறாமல் சேர்த்து வருவதன் மூலம், உடலுக்கு வேண்டிய கால்சியம் சத்தைப் பெறலாம்
ஒரு கப் பச்சை இலை காய்கறிகளில் 100 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இந்தியர்களின் உணவுகளில் பச்சை இலை காய்கறிகள் முதன்மையானவையாகும். அதுவும் உடலுக்கு வேண்டிய கால்சியத்தைப் பெற வெண்டைக்காய், பசலைக் கீரை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
எள்ளு விதைகள்
எள்ளு விதைகள் உணவிற்கு ஒரு நல்ல சுவையைத் தரக்கூடியது. ஒரு டேபிள் ஸ்பூன் 88 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. நீங்கள் பால் குடிக்க விரும்பாதவர்களாக இருந்தால், தினமும் சாலட்டுகள், சப்பாத்தி போன்றவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் எள்ளு விதைகளை சேர்த்து சாப்பிடுங்கள்.