காலை உணவுக்கு சிறந்த ஆப்ஷனான அவகாடோ ; இதில் இத்தனை நன்மைகளா?
ஆரோக்கியமான ஒரு காலை உணவுக்கு ஏற்ற பழமாக கருதப்படுகிறது. பல்வேறு நன்மைகளை வழங்கும் இந்த அவகாடோ பழத்தை கொண்டு நம்முடைய நாளை ஆற்றலுடன் ஆரம்பிக்கலாம்.
அவகாடோ பழங்களில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், அதிலும் குறிப்பாக 100 கிராம் அவகாடோ பழத்தில் 15 கிராம் ஓலிக் அமிலம் காணப்படுகிறது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
மேலும், இந்த கொழுப்புகள் காலைப் பொழுதுக்கு தேவையான தொடர்ச்சியான ஆற்றலையும் உங்களுக்கு வழங்குகிறது.
100 கிராம் அவகாடோ பழத்தில் 7 கிராம் நார்ச்சத்து இருக்கும் காரணத்தால், மலம் எளிதில் வெளியேறுவதற்கு உதவி செய்வதோடு, செரிமான ஆரோக்கியத்திற்கு ஆதரவு தருகிறது. மேலும் நார்ச்சத்து, ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்கி, உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.
மேலும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களுக்கு அவகாடோ பழம் ஒரு சிறந்த காலை உணவாக அமைகிறது.
100 கிராம் அவகாடோ பழத்தில் 485 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது வாழைப்பழங்களை விட அதிகமான அளவாகும். பொட்டாசியம் என்பது இரத்த அழுத்தத்தை சீராக்கவும், தசை வலியை தடுக்கவும், நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தவும் நமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு ஊட்டச்சத்து.
ஒரு அவகாடோ பழத்தில் நமக்கு அன்றாட பரிந்துரைக்கு தேவைப்படும் 20% வைட்டமின் K கிடைக்கிறது. இந்த வைட்டமின் K என்பது ரத்த உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியம். தினமும் அவகாடோ பழத்தை சாப்பிட்டு வர வலுவான எலும்புகள் கிடைத்து, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது.
100 கிராம் அவகாடோ பழத்தில் 29 மில்லி கிராம் மெக்னீசியம் இருப்பதால், தசை செயல்பாட்டுக்கு உதவி செய்வதோடு, வீக்கத்தை குறைத்து, உடலுக்கு ஓய்வளிக்கும் உணர்வை தருகிறது. அவகாடோ பழங்கள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை காலை உணவாக எடுத்துக் கொள்ளும்போது, மன அழுத்தம் குறைந்து, மன நலனும் மேம்படும்.
100 கிராம் அவகாடோ பழத்தில் 2.1 மில்லி கிராம் வைட்டமின் E காணப்படுகிறது. வைட்டமின் E சத்து ஃப்ரீ ரேடிகள்களால் செல்களுக்கு ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இந்த கொழுப்பில் கரையும் ஆன்டி-ஆக்சிடன்ட் சருமம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், உங்களுடைய அழகை மெருகேற்றுவதற்கு இது ஒரு சிறந்த பழம்