குழந்தை போல சருமம் வேண்டுமா? பாலை சருமத்திற்கு இப்படி பயன்படுத்துங்கள்
நாம் சருமத்தை பராமரிக்கும் முறையில் தான் அதன் அழகு இருக்கிறது. வளர வளர நமது சருமம் நமது வயதிற்கு ஏற்றதை போல மாறும். சருமம் அழகாக இருப்பதற்கு நாம் பல பொருட்களை பயன்படுத்துவது வழக்கம்.
சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பொலிவாகவும் மாற்றுகிறது. காலநிலைக்கு ஏற்றவாறு நமது சருமம் ஒவ்வொரு வகையில் மாறும். இதற்கு பால் மிகவும் சிறந்த பொருளாக காணப்படுகின்றது.
தோல் பராமரிப்புப் பொருட்களிலும் பால் முக்கிய மூலப்பொருளாகும். இது சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருகிறது. பாலில் லாக்டிக் அமிலம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.
இது சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது. பாலை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் குறையும் மற்றும் முகப்பரு, சரும எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.
பாலை சருமத்திற்கு இயற்கை க்ளன்சராக பயன்படுத்தலாம். இதற்கு பச்சை பாலை எடுத்து ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து, அதை உங்கள் முகத்தில் மெதுவாகத் துடைத்து காய விடவும்.
பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி இற்கையான ஒரு பொலிவை இந்த பால் சருமத்திற்கு வழங்கும். வீட்டில் இருக்கும் அரிசி மாவுடன் பச்சைப் பாலை கலந்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளவும்.
இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த சரும செல்கள் நீங்கி சருமம் பிரகாசமடையும். இது சருமத்திற்கு பிரகாசத்தை கொடுக்கும். ஃபேஸ் மாஸ் செய்தும் போடலாம்.
இதற்கு மஞ்சள் மற்றும் தேன், இதனுடன் தேவையான அளவு பால் சேர்த்து பேஸ் பேக் போடவும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த பேஸ் பேக்கை அப்ளை செய்து வந்தால் ஒளிரும் சருமத்தை பெறலாம்.
முகத்தை பராமரிக்க தேன் மற்றும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.பாலுடன் ரோஸ் வாட்டரைக் கலந்து டோனர் தயாரிக்கவும். இது சருமத்தின் pH-ஐ சமநிலைப்படுத்துகிறது, சரும துளைகளை இறுக்குகிறது மற்றும் எரிச்சலை தணிக்கிறது.
பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து முகத்தில் அப்பிளை செய்ய வேண்டும். உங்கள் சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது.
இந்த பேஸ் பேக்கை உங்கள் முகத்தில் அப்ளை செய்து காய்ந்தவுடன் கழுவி வந்தால் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. குழந்தை போன்ற மென்மையான சருமத்தை பெற பாலை இந்த முறைகளில் பயன்படுத்தினால் நல்லது.