க்ரீன் டீ யின் மகத்துவம்!
காலையில், க்ரீன் டீ குடிப்பது உடலில் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து உடலை சுறுசுறுப்படைய செய்கிறது. பொதுவாக க்ரீன் டீ உடல் எடையை குறைக்க தான் அதிகமானோர் குடித்து வருகின்றனர்.
ஆனால் இது உடல் எடையை குறைக்காது நிச்சயமாக உங்கள் உடலிலுள்ள ரத்த சர்க்கரையின் அளவை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோயானது 2045-க்குள் உலகளவில் 693 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இதய நோய், பக்கவாதம், குருட்டுத்தன்மை, சிறுநீரக கோளாறு, உடல் ஊனம் போன்ற பல்வேறு ஆபாயங்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமும் க்ரீன் டீ சேர்த்துக்கொள்வது ரத்த குளுக்கோஸ் அளவில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக தெரிகிறது. க்ரீன் டீ சப்ளிமென்ட் கணிசமான அளவு ஃபாஸ்டிங்க் குளுக்கோஸைக் குறைத்துள்ளது எனக் காட்டினாலும், கிளைசெமிக் கட்டுப்பாட்டில் கிரீன் டீ கூடுதல் விளைவுகளை மதிப்பிடும் நீண்ட கால சோதனைகள் தேவை.
இந்த க்ரீன் டீயில் ஆரோக்கியமாகவும் அதே சமயம் சுவையை மேம்படுத்த நினைத்தால் இதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் புதினாவை சேர்த்துக்கொள்ளலாம்.
கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால், உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். இது தவிர, உங்கள் பசியும் குறைகிறது,
இதன் காரணமாக உங்கள் உடலும் பலவீனமடையக்கூடும். வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடித்தால், அது அசிடிட்டி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கிரீன்-டீயில் உள்ள காஃபின் நரம்புத் தளர்ச்சி, தலைச்சுற்றல், நீரிழிவு, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் .