இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் ; அமெரிக்கா அவசர அறிவிப்பு
தினமும் வாக்கிங் போறீங்களா? அப்போ ‘இத’ செஞ்சிக்கோங்க
தினமும் காலையில் வாக்கிங் செல்லும் முன்னர் சில விடயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட சில விடயங்களை தெரிந்து கொண்ட பின்னர் வாக்கிங் செய்தால் அதன் முழுமையான பலனை பெற்றுக் கொள்ளலாம். தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது.
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைப்பவர்கள் டயட் உணவு மற்றும் உடற்பயிற்சியில் தினமும் கவனம் செலுத்த வேண்டும். அப்படி உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் ஒரு மணி நேரமாவது வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தினமும் வாக்கிங் செல்வதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. உதாரணமாக, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு போன்ற நாள்ப்பட்ட நோய்கள் கட்டுக்குள் இருக்கும்.
வாக்கிங் செல்வது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் வாக்கிங் செல்லும் முன்னர் குறிப்பிட்ட சில விடயங்களை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
அப்படியாயின் வாக்கிங் செல்லும் முன்னர் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. காலை வாக்கிங் செல்லும் முன்னர் சூடான நீர் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் உங்களின் தொப்பை குறைய வாய்ப்பு உள்ளது. குளிர்ந்த நீர் பருகுவதை சற்று குறைத்து கொள்ள வேண்டும். இதனால் நோய் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2. வாக்கிங் அல்லது உடற்பயிற்சி செய்த பின்னர் தசைவிறைப்பு என்ற செயன்முறை நிகழும். இதனை நீர் கட்டுக்குள் வைக்கும். அத்துடன் சரும ஆரோக்கியமும் மேம்படும்.
3. தினமும் வாக்கிங் செல்லும் முன்னர் வயிற்றை சுத்தப்படுத்துவது அவசியம். உடற்பயிற்சி, வாக்கிங் அல்லது யோகா போன்ற பயிற்சிகளின் போது உடல் இலகுவாகவும் சுறுசுறுப்பாக உணர வேண்டும் என்றால் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
4. குடல் இயக்கமானது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திலும் தாக்கம் செலுத்துகின்றது. இவ்வாறு செய்து வந்தால் மன ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.