போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தேங்காய் சாதத்தை எப்படி சுவையான முறையில் தயாரிப்பது
நம்மில் பலருக்கும் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், தேங்காய் சாதம் என்று வெரைட்டி ரைஸ் சாப்பிட பிடிக்கும். இதில் நீங்கள் தேங்காய் சாத பிரியர் என்றால், அதை சுவையான முறையில் செய்ய தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால், இன்று தேங்காய் சாதத்தை எப்படி சுவையான முறையில் தயாரிப்பது என்பதைக் காண்போம்.
இந்த தேங்காய் சாதம் பேச்சுலர்களும் செய்வதற்கு ஏற்றவாறு சுலபமாக இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த தேங்காய் சாதத்தின் செய்முறையைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: * சாதம் – 1 கப் * துருவிய தேங்காய் – 1/4 கப்
* உப்பு – சுவைக்கேற்ப தாளிப்பதற்கு – * தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன் * உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் * சீரகம் – 1/2 டீஸ்பூன் * பச்சை மிளகாய் – 1 * வரமிளகாய் – 1 * கறிவேப்பிலை – சிறிது * முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்
பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். * பின்பு அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வறுக்க வேண்டும். * பிறகு அதில் சாதத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் சாதம் தயார்.