நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள்
பிரியாணி, புலாவ், சூப், குழம்பு போன்ற இந்திய உணவுகளுக்கு நல்ல மணத்தைத் தரக்கூடிய ஓர் பொருள் தான் பிரியாணி இலை. இந்த இலை உணவிற்கு நல்ல மணத்தை தருவதால், இந்திய உணவுகளில் இது முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் இந்த பிரியாணி இலை உணவிற்கு மணத்தை தருவதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது என்பது தெரியுமா?
பிரியாணி இலையின் மருத்துவ குணங்களால் பழங்காலத்தில் இது பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக இதில் புற்றுநோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. ஆகவே பல பெரிய பிரச்சனைகளை திறம்பட நிர்வகிக்கவும் உதவும். மேலும் ஆயுர்வேதத்தில் கூட இந்த பிரியாணி இலை பல்வேறு நோய்களை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட பிரியாணி இலையைக் கொண்டு டீ தயாரித்து குடித்து வந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்ப்பதோடு கட்டுப்படுத்தலாம். இப்போது பிரியாணி இலைக் கொண்டு டீ தயாரித்து குடிப்பதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.
சர்க்கரை நோயை சமாளிப்பது கடினமாக உள்ளதா அல்லது சர்க்கரை நோய் வரும் அபாயத்தில் இருப்பது போன்று உணர்ந்தால், பிரியாணி இலை டீ போட்டு குடியுங்கள். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோயைக் கையாள்வதில் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
பிரியாணி இலை டீயானது இரைப்பை குடல் பாதிப்பைத் தடுப்பதோடு, சிறுநீர் கழிப்பதை ஊக்குவித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் பிரியாணி இலைகளில் உள்ள உட்பொருட்கள் வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றைத் தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பிரியாணி இலை அத்தியாவசிய எண்ணெயின் ஆதாரமாகவும் உள்ளது. இந்த இலையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் அத்தியாவசிய எண்ணெய் பல்வேறு சுவாச பிரச்சனைகளைப் போக்கும் திறன் கொண்டது.
பிரியாணி இலையில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது பூஞ்சை தொற்றுக்களை எதிர்த்துப் போராடும். இது தவிர இதில் வைட்டமின் சி-யும் இருப்பதால், இது சருமத்தை எந்த வகையான தொற்று மற்றும் எரிச்சலில் இருந்தும் பாதுகாக்கும்.
எப்போதும் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? ஆம் என்றால் பிரியாணி இலையைக் கொண்டு டீ தயாரித்து குடியுங்கள். இதனால் அதில் உள்ள லினலூல் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அளவைக் குறைக்கும். அதோடு, இது இனிமையான குணங்களைக் கொண்டுள்ளது. ஆகவே இது மனம் பதட்டமடையும் போது அமைதியடையச் செய்து, மன அழுத்தத்தின் வாய்ப்புக்களைக் குறைக்கும்.
பிரியாணி இலையில் செஸ்கிடர்பீன் லாக்டோன்கள் உள்ளன, அவை நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் உடலினுள் உள்ள வீக்கத்தை எதிர்த்துப் போராடும்.
பிரியாணி இலையில் ருட்டின் மற்றும் காஃபிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது. இது இதயம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. மேலும் இந்த பண்புகள் இதயத்தின் தந்துகி சுவர்களை வலுப்படுத்தி, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
உங்களுக்கு தலைமுடி அதிகம் கொட்டுகிறதா மற்றும் பொடுகு அதிகம் உள்ளதா? பிரியாணி இலையில் உள்ள பண்புகள் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு பிரியாணி இலையை சுடுநீரில் ஊற வைத்து, தலைக்கு ஷாம்பு போட்டு தலைமுடியை அலசிய பின், அந்நீரை ஸ்கால்ப்பில் படும்படி தேய்க்க வேண்டும். இதனால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவதோடு, முடி வளர்ச்சியும் தூண்டப்படும்.
ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் ஆய்வின் படி, பிரியாணி இலையில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதோடு இதில் உள்ள பைட்டோநியூட்ரியன்கள், கேட்டசின்கள், லினலூல் மற்றும் பார்த்தீனோலைடு உள்ளிட்ட கரிம சேர்மங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் கலவையானது புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களின் விளைவுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. ஆகவே புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால் பிரியாணி இலை கொண்டு டீ போட்டு அவ்வப்போது குடியுங்கள்.
பிரியாணி இலை டீ தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
பிரியாணி இலை – 3
பட்டைத் தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சை மற்றும் தேன் (விருப்பத்திற்கேற்ப)
செய்முறை: *
பிரியாணி இலையை நீரில் கழுவ வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். * பின் அதில் பிரியாணி இலை மற்றும் பட்டை தூள் சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். * பின்பு அதை வடிகட்டி, அதில் சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த பிரியாணி இலை டீயை தினமும் காலையில் காபி, டீ-க்கு பதிலாக குடித்தால் நற்பலன்கள் கிடைக்கும்.