போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மாங்காய் புலாவ்
கோடையில் மாங்காய் விலை குறைவில் அதிகம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் மாங்காயை பலர் தொக்கு, ஊறுகாய் என்று செய்து சுவைப்பார்கள். ஆனால் அதனை கொண்டு அருமையான சுவையில் புலாவ் செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா?
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, கடுகு, வரமிளகாய் சேர்த்து குறைவான தீயில் தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் துருவிய மாங்காயை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்கி, பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, 7 நிமிடம் பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர கொதிக்க விடவும்.
பிறகு அதில் சாதத்தை போட்டு, நன்கு சாதத்துடன் மசாலாக்கள் ஒன்று சேர பிரட்டி, பின் எலுமிச்சை சாற்றை அதன் மேல் பிழிந்து பிரட்டி, கொத்தமல்லியைத் தூவினால், மாங்காய் புலாவ் ரெடி!!!