போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் நண்டு சூப்… பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது?
பொதுவாக நண்டுகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. எந்தவிதமான ரசாயனமும் இல்லாமல் மீன்கள் போல் மிகுந்த ஆரோக்கியத்தை அள்ளித்தரும் உணவுகளில் இதுவும் ஒன்று.
நண்டுகளில் குறைந்த அளவு கொழுப்பும், கூடியளவு புரதமும் இருப்பதால். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன் குழந்தைகளின் உடல வளர்ச்சியை துரிதப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
நண்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம்-புரதம் ஆகியன நிறைந்து காணப்படுவதால் இவை உடவில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைக்கும் திறனை கொண்டுள்ளது.இது மாரடைப்பு அபாயத்தை குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
நண்டில் உள்ள ஜிங்க், எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும். கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது.
ஆனால் கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு ஃபோலேட் மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தாலும், நண்டில் மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது.
கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் நண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது குழந்தைக்கு மிகவும் நல்லது. சிறுநீரக செயல்பாடு சரியான முறையில் நடப்பதற்கும் நண்டு பெரிதும் உதவுகிறது.
நண்டில் பாஸ்பரஸ் அதிகம் காணப்படுகின்றது. இது மூளையின் சிறந்த செயற்பாட்டிற்கும், பற்களை வலிமையாக்கவும் உதவுகின்றது. இதில், வைட்டமின் A செறிவாக இருப்பதால், கண்பார்வைக்கு பெரும் நன்மை வழங்குகின்றது.வாரத்திற்கு ஒரு முறை நண்டு சூப் குடிப்பது சிறந்த ஆரோக்கிய பலன்களை கொடுக்கும்.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட நண்டை வைத்து மிகவும் எளிமையான முறையில் அசத்தல் சுவையில் எவ்வாறு சூப் தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நண்டு – 2
தக்காளி – 1
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – சிறு துண்டு
மிளகு – 1/2 தே.கரண்டி
சீரகம் – 1/4 தே.கரண்டி
எண்ணெய் – 3 தே. கரண்டி
பூண்டு – 4 பல்
பச்சைமிளகாய் – 2
பட்டை – தேவையான அளவு
பிரியாணி இலை – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் நண்டை நன்றாக சுத்தம் செய்து, நண்டின் சதைப்பகுதி வெளியில் வரும் வகையில் தட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி, பூண்டையும் தட்டிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது குடிக்கும் தண்ணீரை போதுமான அளவு சேர்த்து தண்ணீர் நன்றாக கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிட வேண்டும்.
நண்டு நன்றாக வெந்ததன் பின்னர் மிளகு, சீரகத்தூள் போட்டு நன்றாக கிளறிவிட வேண்டும்.
இறுதியாக நண்டு ஓடு அடியில் இருக்கும் என்பதால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவினால் அசத்தல் சுவையில் சூடச்சுட நண்டு சூப் தயார்.