போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
அக்னி சிறகுகள் டீசரை வெளியிட உள்ள நடிகரான சூர்யா
நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவரும் இணைந்து’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஷாலினி பாண்டே இப்போது படத்தில் இருந்து வெளியேறிவிட்டாராம். இதனால் அவர் நடித்த காட்சிகளுக்குப் பதில் இப்போது அக்ஷரா ஹாசனை புக் செய்து படத்தை இயக்கி வருகிறாராம் நவீன்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் டீசரை மே 27 (இன்று) ஆம் தேதி வெளியிட உள்ளனர். இந்த டீசரை முன்னணி நடிகரான சூர்யா வெளியிட உள்ளதாக இயக்குனர் நவீன் அறிவித்துள்ளார். மேலும் அவருடைய டிவீட்டில் “வாழ்க்கையோட பெரும்பாலான விடியல்கள் வழக்கமானதாவே இருக்கு. நாளைய என் விடியல் என்னவா வேணா இருக்கலாம். ஆனா கண்டிப்பா வழக்கமானதல்ல! It’s a honour!. சூர்யா சார் அக்னி சிறகுகள் டீசரை வெளியிடுகிறார்” என கூறியுள்ளார்.