அஜித்தை வைத்து படம் இயக்குவேன்
மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இதன்பின் கார்த்தியுடன் கைதி மற்றும் தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வருகிறார்.
இதனை தொடர்ந்து தனது குருநாதரான உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார்.
மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.
இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் ‘ அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா ‘ என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் ‘ கண்டிப்பாக இயக்குவேன்.
அதற்கான கதையும் நேரமும் கூடிவரும் போது, அது நடக்கும் ‘ என்று தெரிவித்துள்ளார்.