ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
அந்த விஷயத்தை மறக்க விரும்பவில்லை !! சமந்தா !!

நடிகை சமந்தா அவரது சொந்த வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். காதலித்து திருமணம் செய்த நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தது, அதன் பின் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதனுடன் போராடி வருகிறார்.
மேலும் தற்போது சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனில் சமந்தா பிஸியாக இருந்து வருகிறார். பல்வேறு பேட்டிகளை அவர் கொடுத்து வரும் நிலையில் அதில் பல விஷயங்கள் கூறி இருக்கிறார்.
அந்த விஷயத்தை மறக்கவே மாட்டேன்..
ஒரு தெலுங்கு இணையதளத்திற்கு சமந்தா அளித்த பேட்டியில் ‘உங்கள் வாழ்க்கையில் நடந்த எந்த விஷயத்தையாவது மறக்க விரும்புகிறீர்களா?’ என கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
Relationship பற்றி கேட்கிறீர்களா என சமந்தா கேட்க, ‘எந்த விஷயமாகவும் இருக்கலாம்’ என தொகுப்பாளர் விளக்கம் கொடுக்கிறார்.”நான் எந்த விஷயத்தையும் மறக்க விரும்பவில்லை. ஒவ்வொரு விஷயமும் எனக்கு வாழ்க்கையில் பாடம் கற்றுக்கொடுத்து இருக்கின்றன. அதனால் எதையும் மறக்க மாட்டேன்” என சமந்தா கூறி இருக்கிறார்.