கிரே மேன் படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ்

சில தினங்கள் முன்பு தான் தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான கிரே மேன் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதில் தனுஷ் முகம் சில நொடிகள் மட்டுமே காட்டப்பட்டு இருந்தது. அதனால் தனுஷ் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் இயக்குனர்கள் ரஸ்ஸோ பிரதர்ஸ் அளித்திருக்கும் பேட்டியில் தனுஷ் ரோல் பற்றி பேசி இருக்கின்றனர்.
தனுஷ் இந்த படத்தில் கொலையாளியாக நடிக்கிறார். அவருக்கு நல்ல நடிப்பு திறமை இருக்கிறது. அவருக்காகவே இந்த ரோல் உருவாக்கினோம். இரண்டு பெரிய சண்டை காட்சிகள் அவருக்கு இருக்கிறது என தெரிவித்து உள்ளனர்.
தனுஷ் கதாபாத்திரம் நெகடிவ் ஆனது என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.