போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
குஷ்பூவின் ட்விட்டர் பக்க லேட்டஸ்ட் ப்ரோஃயில்
தமிழ் சினிமாவில் வெற்றிவிழா, சின்னத்தம்பி ஆகிய படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை குஷ்பூ.
இதன்பின், ரஜினி, கமல், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக ஆனார்.
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்துவரும் நடிகை குஷ்பூ தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீரா சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை குஷ்பூவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில், தற்போது குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் ப்ரோஃயில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதில், குஷ்பூவின் முகத்தை பார்த்த பலரும், இவரின் முகத்திற்கு என்ன ஆச்சு என்று கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..