கையில் குழந்தையுடன் அமலா பால்: நடுக்கடலில் திருமண நாள் சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்…

நடிகை அமலா பால் தன்னுடைய முதல் திருமண நாளை கடல் நடுவே கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சிந்துசமவெளி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அமலாபால் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தார்.
தொடர்ந்து, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் தனக்கென குறுகிய காலத்தில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்த அமலா பால், 2017ல் இவர்கள் கருத்து வேறுப்பாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
அதனை தொடர்ந்து அமலா பாலின் நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை அமலா பால் ஏற்றுக்கொள்வதையும் வீடியோவாக வெளியிட்டார்.
கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது.
இந்நிலையில், தன்னுடைய முதலாவது திருமண நாளை கேரள மாநிலம் குமரகோமில் உள்ள போட் ஹவுஸில் கொண்டாடியுள்ளார்.
அப்போது அமலா பாலை தனியாக படகில் ஒரு இடத்துக்கு அழைத்து சென்ற அவரது கணவர், அங்கு கடலின் நடுவே சிவப்பு கம்பளம் விரித்த மேடையில் ஒரு ரொமாண்டிக் டின்னரை ஏற்பாடு செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி லைக்குகளை குவித்து வருகின்றது.