ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் இலங்கைப் பெண் ஜனனி! வைரலாகும் புகைப்படங்கள்

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சியில் 6 சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடி முடிந்தது.
பிக்பாஸ் சீசன் 6யில் போட்டியாளாராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் இடம்பிடித்தவர்தான் இலங்கைப் பெண் ஜனனி.
பிக்பாஸ் வீட்டில் அனைத்து விளையாட்டுகளிலும் சிறப்பாக விடையாடிய ஜனனி யாரும் எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார். இது ஜனனியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் சமூகவலைதளங்களில் ஆர்வம் காட்டிவரும் ஜனனி தினத்தோறும் போட்டோசூட் எடுத்து அதனை இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இன்று சிவப்பு சேலையில் கியூட்டாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.