நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
திருமணத்திற்கு பிறகு முதல் திரைப்படம் நடிக்கும் நடிகை நயன்தாரா!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கபடும் பட்டத்தை கொண்டவர் நடிகை நயன்தாரா, இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை.
அப்படியான டாப் நடிகை நயன்தாராவிற்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது, அவர் நீண்ட நாள் காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனை அவர் திருமணம் செய்துகொண்டார்.
மிகவும் அடம்பரமாக நடந்த அவர்களின் திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு டாப் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், ஷாருக் கான், சூர்யா, கார்த்தி என பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடிக்கவுள்ள முதல் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து வரும் ஜவான் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது கணவருடன் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு நயன்தாரா கலந்து கொள்ளும் முதல் திரைப்பட ஷூட்டிங் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.