48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
பிரபல பாடகர் திடீர் மரணம்; ரசிகர்கள் சோகம்
பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னி நதி எனும் பாடலை பாடிய பாடகர் பம்பா பாக்யா திடீரென உயிரிழந்த சம்பம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான பம்பா பாக்யா நேற்று திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது. மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில் சென்னை பாடியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை வரலாறு
49 வயதாகும் இவர் சர்வம் தாளமயம், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னி நதி போன்ற பாடல்கள் மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி உட்படப் பல மொழிகளில் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
தனித்துவமான தன் குறளால் மக்களின் கவனத்தை ஈர்த்த பம்பா பாக்யா அக்டோபர் 31 ஆம் தேதி 1972ல் சென்னையில் பிறந்த இவர் ஆரம்பக் காலங்களில் திருமண கச்சேரிகளில் பாடல் பாடிவந்த இவர் பின் தமிழ்த் திரையுலகில் மிக முக்கிய பாடால்களை பாடியுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற பம்பா எனும் இசைக்கலைஞரைப்போல் இவரின் இசை ஞானம் இருப்பதால் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானே இவருக்குப் பம்பா எனப் பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
திரை பிரபலங்கள்- ரசிகர்கள் இரங்கல்
பாம்பா பாக்யா வரும் ஆண்டுகளில் பல படங்களில் பாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரின் மறைவு அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடகர் பம்பா பாக்யா மறைவுக்குத் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.