புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்!

நடிகர் கமல்ஹாசனின் தீவிர வெறியரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் தான் விக்ரம். இப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி உலகம் முழுவதும் படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.
படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலை எட்டி வருகிறது. ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே ரூ. 200, 300 கோடி என வசூலை ஈட்டியது.
ரிலீஸ் ஆகி 30 நாட்களுக்கு மேலாக நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது, வசூலிலும் கலக்கி வருகிறது.
தற்போது படம் உலகம் முழுவதும் ரூ. 436 கோடி வரை வசூலித்துள்ளது. இப்போது என்ன நல்ல விஷயம் என்றால் வெளிநாட்டு வசூலிலேயே படம் ரூ. 300 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.