ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
மாஸான வசனத்தை தசாவதாரம் படத்தின் பல்ராம் நாயுடு பேசினால் எப்படி இருக்கும்

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. வரும் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.
இதையடுத்து படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை கமல்ஹாசனும் படக்குழுவினரும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு விக்ரம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதில் கமல் மற்றும் லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கமல் விக்ரம் படத்தில் வரும் மாஸான வசனத்தை தசாவதாரம் படத்தின் பல்ராம் நாயுடு பேசினால் எப்படி இருக்கும் என்று பேசிக் காட்டியுள்ளார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.