ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
மாஸ் லுக்கில் தனுஷ்!

நடிகர் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் ப்ரீமியர் ஷோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலந்துகொண்டார்.
இரு மகன்களுடன் சென்று அங்கு புகைப்படம் எடுத்து வெளியிட்ட நிலையில், தனுஷுற்கு அங்கு செம்ம வரவேற்பை படக்குழுவினர்கள் கொடுத்தனர்.
தி கிரே மேன் திரைப்படம் ஜுலை 22-ல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் தனுஷின் ஒரு ஸ்டைலிஷான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், பச்சை நிற உடையில், கண்ணாடி அணிந்தபடி ஸ்டைலாக நடந்து வருகிறார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.