முன்னணி இசையமைப்பாளருக்கு விரைவில் திருமணம்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அனிருத் ரவிசந்தர்.
இவர் தற்போது அஜித், விஜய், கமல், ரஜினி என அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்திற்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்று பல வதந்திகள் பேசப்பட்டு வருகிறது.
ஆனால், இது உண்மை இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. ஆனால், அனிருத்தின் திருமண வேலை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மணப்பெண் திரைத்துறையை சேர்ந்தவர் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். விரைவில் இதுகுறித்து அனிருத் விரைவில் அதிகாரப்பூர்வமாக கூறுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.