போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வாங்கிய கடனை திருப்பி செலுத்தவுள்ள இயக்குனர் கௌதம் மேனன்
![வாங்கிய கடனை திருப்பி செலுத்தவுள்ள இயக்குனர் கௌதம் மேனன்](http://itamilnews.com/wp-content/uploads/2022/05/28326mju-Gautham-Menon-640x468-1.jpg)
சின்னதம்பி உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த கேபி பிலிம்ஸ் பாலு அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். முன்னணி தயாரிப்பாளராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டு சினிமாவுக்கு பைனான்ஸ் மட்டுமே கொடுத்து வந்தார்.
இதனால் இவரிடம் பல தயாரிப்பாளர்கள் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். ஆனால் சமீபத்தில் திடீரென்று கொரோனாவால் இறந்ததை அடுத்து இவரது குடும்பம் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. அப்படி கடன் வாங்கியவர்களில் ஒருவரான இயக்குனர் கௌதம் மேனன் விரைவில் தான் வாங்கிய பணத்தை குடும்பத்தாருக்கு திருப்பி அளிப்பதாக உறுதி அளித்துள்ளாராம்.