ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என போதைப்பொருள் தடுப்பு பிரிவு
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்கள் முன்னதாக ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் கார்டெல்லா க்ரூஸ் கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
முதலில் அவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மட்டும் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது அறிக்கை அளித்துள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆர்யன் கான் நிரபராதி என தெரிவித்துள்ளது.