போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
அமெரிக்க தூதுவரை சந்தித்த எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும்(Julie Chung) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, எரிசக்தி துறையில் இலங்கை முன்னெடுக்கவுள்ள மாற்றுவழித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு, தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.