நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இன்றைய தினம் காலியில் உள்ள பல பகுதிகளுக்கு 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்
காலியில் உள்ள பல பகுதிகளுக்கு நாளைய தினம் (27-05-2022) 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர்வெட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும், பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த வேண்டியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அம்பலாங்கொட, பலபிட்டிய, பெந்தோட்டை, படபொல மற்றும் எல்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் எனவும்,
அந்த காலப்பகுதியில் ஹிக்கடுவ பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.