போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கைக்கான விமானங்களை இரத்து செய்யும் சர்வதேச விமான நிறுவனங்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக இலங்கைக்கான விமானங்களை சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்யும் அல்லது குறைக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் தொடரும் சிக்கல் நிலைமைகள் காரணமாக விமானங்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், குறித்த விமானங்கள் இலங்கைக்கு வரும் போது எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக எரிபொருளையும் எடுத்து வர வேண்டிய நிலைமை ஏற்படும்.
அவ்வாறான நிலமை ஏற்படுமெனில் அது அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாக அமையும், விமானங்கள் சொந்த எரிபொருளைச் சுமந்து கொண்டு பறந்தால், சரக்குகளின் எடையையும், பயணிகளின் எண்ணிக்கையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது விமான நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை செலுத்தும்.