இலங்கையில் துப்பாக்கி தொழிற்சாலை; இளம் வர்த்தகர் அதிரடியாக கைது!

இரத்தினபுரி, ரக்வானை பிரதேசத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி தொழிற்சாலை நடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்படடுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ரக்வானை பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான வர்த்தகரிடமிருந்து துப்பாக்கிகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், சுத்தியல் ,இரண்டு உலோக சுத்தியல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.