கனடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உள்பட மூன்று தமிழர்கள் வெற்றி!
அதிகரிக்கும் சிறுவர் மீதான வன்புணர்வு ; வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 290 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
மாதாந்தம் இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும், சிறுவர்கள் தொடர்பான அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்பஹா, குருணாகல் மாவட்டங்களில் இருந்து சிறுவர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.