ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

06 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை குறைப்பு நேற்று (24) முதல் அமுலுக்கு வரும் நிலையில், குறைக்கப்பட்ட பொருட்களின் வகைகள் மற்றும் படி,
பால் மா(400 கிராம்) ரூ.50 குறைந்து ரூ.1,030 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காய்ந்த மிளகாய் 1 கிலோ ரூ.45 குறைந்து ரூ.1,350 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பருப்பு ரூ.10 குறைந்து ரூ.325 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனை சோயா மீட் 1 கிலோ 10 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.660 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயம் 1 கிலோவுக்கு 6 ரூபாய் குறைந்து ரூ.129 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை சீனி 1 கிலோ 4 ரூபாய் குறைந்து 239 ரூபாவாக உள்ளது.